Thursday, March 6, 2014

துரோகம் வெட்கமறியாது! - தெ.சுந்தரமகாலிங்கம்





ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கமே ஈழத் தமிழர்களுக்கு எதிரான வலுவான பொய்யான பரப்புரையுடன் அமைந்துள்ளது. சொந்த நாளிதழ் என்ற காரணத்தால் ‘தி இந்து’ நாளிதழின் தமிழ்ப்பதிப்பில் என்.ராம் வழங்கியுள்ள சிறப்புப் பேட்டி பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article5524113.ece

  பேட்டியின் தலைப்பே “சாத்தியமே இல்லாதது தமிழீழம்” என்றுள்ளது.

எது சாத்தியம் இல்லாதது?

 அறுபது ஆண்டுகளுக்குள் எவ்வளவு மாற்றம்! இசைத்தட்டின் பக்கத்தை மாற்றிப் போட்டு ஊசி மாற்றிப் பாட்டுக்கேட்டது நினைவிருக்கிறதா? இன்று விரல் அகலத் தட்டுக்குள் நானூறு பாடல்!

 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தொடங்கிய ராமின் மூதாதையர் இன்றைய ஊடக வசதிகளை அன்று சாத்தியமென்று எண்ணியிருப்பார்களா?

 சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையுடனா நெல்சன் மண்டேலா 26 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாழத் துணிந்து தம் இன மக்களுக்குச் சுதந்திரமான ஆட்சியைப் பெற்று தந்தார்?

 “விடுதலைப்புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடுதான் அணுகினோம். அவர்களுடைய நியாயங்களை எழுதினோம். ஆனால் ரொம்ப சீக்கிரமே அவர்கள் குரூரமாகத் தங்கள் முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக்குழுக்கள் போராட்டத்தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள்” என்று ராம் எழுதியுள்ளார்.

 சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நிலையில் நின்று கொண்டு இலங்கைக்கு ஆயுத உதவியோடு வேறு பல உதவிகளையும் செய்து வந்த வேளையில் ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டு வருவதற்காக ‘ரா’மூலம் ஈழப் பேராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் ராணுவப்பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார் இந்திராகாந்தி.

 இதைக்கூட இந்திரா காந்தி எளிதில் செய்துவிடவில்லை. 1983 ஜூலையில் இலங்கையில் சிங்களர்கள் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றனர். தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்தனர். சொத்துக்களை, வீடுகளைச் சூறையாடினர். இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். தமிழ்நாடே கொந்தளித்தது. அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை 24.10.1983ல் அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில்தான் இந்திராகாந்தி ஈழப்பிரச்சினையில் தலையிட்டார்.

 கிழக்கு பாகிஸ்தானில் இனப் படுகொலை நடப்பதாக உலகநாடுகளில் முரசறைந்து விட்டு வந்த கையோடு இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேசம் மலரச்செய்தவர் இந்திராகாந்தி.

 “தமிழன் கறி இங்கே கிடைக்கும்” என அறிவிப்புப் பலகையை தொங்கவிட்ட இனவெறிச் சிங்களர்களை ஒடுக்க இந்திரா அம்மையார் ராணுத்தை ஈழத்துக்கு அனுப்பவில்லை.

 இந்திய உளவு அமைப்பான ‘ரா’ இலங்கையின் கைக்கூலியாக மாறியது. விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனைக் கொல்ல ஏனைய பேராளிக்குழுக்களுக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு ஆயுதங்களும் வழங்கியது ‘ரா’.

 சக போராளிக் குழுக்கள் எதிரிகளாக, துரோகிகளாக மாறிய நிலையில் பிரபாகரன் தற்காத்துக் கொள்ள அவர்களை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 ராம் பெரிய படிப்பாளி, இடதுசாரி இயக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டவராகப் பேட்டியில் தம்மை அடையாளம் காட்டிக்கொள்பவர். கம்யூனிஸ்ட் நாடுகளில் துரோகிகளை அழிப்பது மிக முக்கியமாகக் கருதப்பட்டது அவருக்குத் தெரியாதா? தெரியும். எனினும் புலிகள் இயக்கத்தின்மீது சேற்றை வாரி வீசத் துணிந்துவிட்டவர் இப்படி ஏதேனும் செல்லுபடியாகாத குற்றச்சாட்டைக் கூறியாக வேண்டும்.

 அகிம்சையே உருவான காந்திஜியின் தலைமையை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் மகத்தான தியாகங்களைச் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தம் இறுதிக் காலத்தில் அரசியலைவிட்டு ஒதுங்கி மளிகைக்கடை வைத்துப் பிழைப்பு நடத்தியதற்க்கான காரணத்தை ராம் கூறுவாரா?.

 சஞ்சய்காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் மரணத்துக்கும் டில்லி சிம்மாசனத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் உணரவேண்டும். சுல்தான்கள் ஆட்சி தொடங்கி முகலாயர் ஆட்சி முடியவுள்ள வரலாற்றைச் சற்று ஊன்றிப் படித்தாரானால் அவருக்குப் புரியும். இப்படிச் சகட்டு மேனிக்குப் பிரபாகரனைப் பழிப்பதை நிறுத்திக்கொள்வார்.

 இலங்கைப் பிரச்சினை என்று பொதுப்படையாக அழைக்கப்படும் ஈழப் பிரச்சினையில் இந்தியா என்றுமே போதிய அக்கறை காட்டியதில்லை.

 ஒருமுறை டில்லி மாநிலங்களவையில் ஈழத்தமிழர் பிரச்சினைப்பற்றி அண்ணா மிக உருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன் குறுக்கிட்டு “நீங்கள் ஏன் வேறு நாட்டுச் சிக்கலை இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறீர்கள்? இது பிற நாட்டு உள் விஷயத்தில் தலையிடுவதாக ஆகாதா?” என்று கேட்டார்.

 அதற்கு அண்ணா “அடுத்த வீட்டில் கணவன்-மனைவி நெருக்கமாக இருக்கும்போது எட்டிப்பார்ப்பது தவறுதான். ஆனால் இந்த மனைவியைக் கொடுமைக்காரக் கணவன் கழுத்தை நெரித்துக் கொல்ல முயலும்போது அவள் கத்துவதைக் கேட்டு ஒடி உதவுவது எப்படி தவறாகும்? அதிலும் அந்தப் பெண் எனக்கு தங்கையாக இருக்கும்போது” என்றார். இதைக்கேட்டதும் அமைச்சர் மௌனமாகிவிட்டார்.

 இன்று சல்மான்குர்ஷித் முடிய “இலங்கை நட்பு நாடு” என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
 
கிருஷ்ணமேனனின் வாரிசுகளாக ஏ.கே.அந்தோனி, சிவசங்கரமேனன், எம்.கே.நாராயணன், ஐ.நா.அவையில் விஜய் நம்பியார் என்று மலையாளிகளாக இருந்து கொண்டு ஈழப்பிரச்சினையில் தமிழர் விரோதப் போக்கைப் பின்பற்றுவதைச் சாதாரணமாக நினைக்கக்கூடாது.

 “பின் வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்துவிட்டன. உண்மையில் பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட். துப்பாக்கிகள் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்தில்லோ இல்லை. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்கு தெளிவாகிவட்டது” என்கிறார் ராம்.

 பிரபாகரனுக்கு அரசியல் தெரியவில்லை என்று கூறுவது மொத்த விஷயத்தையும் மூடி மறைக்கச் செய்யும் பித்தலாட்டமாகும் . விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தெளிவான அரசியல் பார்வை இருந்தது. “தமிழீழம் எங்கள் தாகம்” என்னும் சிறு பிரசுரத்தில் அது காணக் கிடைக்கிறது. தமிழீழ விடுதலையைத் தவிர அவருக்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

 நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே தந்தை செல்வா காலத்திலிருந்தே சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நடந்த ஆயுதமற்ற போராட்டங்கள் பயனற்றுப் போன நிலையில் தானே விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தினார்கள்.

 இந்திய சுதந்திரப் போரட்ட காலத்தில் பகத்சிங்,நேதாஜி போன்றோர் ஆயுதமேந்திப் போராடியது ராமுக்குத் தெரியாதா?

 “இந்த பொடியன்களை விட்டா (விடுதலைப்புலிகளை) எங்களுக்கு ஆரிருக்கா?” என்று ஈழ மக்கள் கூறியதை வானொலி வழியே நான் கேட்டிருக்கிறேன். அதுதானே உண்மையும்.

 தமிழீழ விடுதலையைத் தவிர அவருக்கு வேறு என்ன நோக்கம் இருக்கமுடியும்? பிற நோக்கங்கள் இருந்தால் அவற்றை ராம் பட்டியலிட்டுக் காட்டலாம். அதை விட்டுவிட்டுப் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டக்கூடாது.
 
பிரபாகரனுக்குப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று ராம் கூறுவது ஆதாரமற்றது.

 திம்பு பேச்சுவார்த்தையின்போது ராஜீவ் காந்தி மிகப்பெரிய நாட்டின் பிரதமர் என்ற நிலையில் திமிருடன் நடந்து கொண்டார். பிரபாகரனை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

 நார்வே பேச்சு வார்த்தைகளிலும் சிங்கள அரசின் பிடிவாதப் போக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. பின்னாளில் நார்வே தரப்பு ஒதுங்குவதற்கு இந்தியா ஒரு காரணமாக விளங்கியது தெரிய வந்தது. 

 புலிகளின் அரசியல் விவகாரத்தை அண்டன் பாலசிங்கம் கவனித்து வந்தார் என்பதைப் புலிகள் கூட்டிய சர்வதேச நிருபர்கள் கூட்டத்தில் நாம் கண்டோம். ஒவ்வொரு துறைக்கும் தக்க ஆலோசகர்கள் பிரபாகரனிடம் இருந்தனர். 
 பிரபாகரனுக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லை என்று ராம் குற்றம் சாட்டுகிறார். ஜனநாயகம் என்று அவர் எதைக் கருதுகிறார்?

 பேட்டியின்போது “இந்திய வரலாற்றில் நடந்த மாபெரும் வரலாற்றுத் தவறு” என்று இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலையை ராம் சுட்டிக் காட்டுகிறார். அத்தகைய தவறு ஜனநாயக நாடு என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தானே நடந்தது!

 காங்கிரஸ் கட்சியில் என்ன ஜனநாயகம் வாழ்கிறது? ஒரு வார்டு மெம்பர் நியமனத்துக்கும் சோனியா முகத்தைப் பார்க்கும் நிலைதானே உள்ளது. 

 இடதுசாரிக் கட்சிகளிடம் உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. வேறு எந்தக் கட்சி ஜனநாயக முறைப்படி காரியங்களை நடத்திக் கொண்டிருக்கிறது?

 வெள்ளைக்காரன் கொண்டு வந்த ”ரௌலட் சட்டம்” பண்டித மோதிலால் நேருவின் கடும் கண்டனத்தைச் சந்தித்தது. ஆனால், இன்று சுதந்திர ஜனநாயக இந்தியாவில் ரௌலட் சட்டத்தைக் காட்டிலும் கொடுமையான உட்பிரிவுகளைக் கொண்ட தடா, பொடா, எஸ்மா, டெஸ்மா என்று வரிசையாக அணிவகுத்து நிற்கும் கறுப்புச் சட்டங்கள் எத்தனை!.

 உச்ச நீதிமன்ற அறிவுரைக்குப் பின்னும் இதுவரை பேரிடர் மேலாண்மைப் பாதுகாப்பு ஒத்திகை ஒருமுறை கூடக் கூடங்குளத்தில் நடத்தப்படவில்லை என்பதுதான் இங்கே ஜனநாயகம் இருக்கும் லட்சணம்!.

 இந்தியச் சிறைச் சாலைகளில் விசாரணைக் கைதிகள் என்ற அளவில் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்துக் கொண்டிருப்போரைப் பற்றிக் கவலைப்படாதது இந்திய ஜனநாயகம்!.
 சாதியும் சாராயமும் பணமும் வாக்குகளைக் குவிப்பதன் மூலம் கட்டமைக்கப்படுவது இங்கே ஜனநாயகம்!.

 சீனாவுக்கு ஜனநாயகம் குறித்து எடுத்துச் சொல்வாரா ராம்?

 ஆயுதப் போராட்டம் அரசுப் பயங்கரவாதத்தை எதிர்த்து நடக்கும் நிலையில் ரகசியம் காக்கப்படுவது மிக முக்கியம். அங்கே ‘ஜனநாயகம்’ பொருத்தமற்றது. 

 துரோகி கருணாவை விட்டுவைத்தது ஈழப் போரில் புலிகளின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். 

 ஆயுதப் புரட்சியாளர்கள் துப்பாக்கியின் மீதுதான் நம்பிக்கை வைக்கமுடியும். “கடவுளை நம்பு” அதே சமயம் வெடிமருந்தை நனையவிடாமல் பார்த்துக்கொள்” என்ற வாசகத்தை ராம் கேட்டதில்லையா?

 “ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்” என்பது எதன்பொருட்டு ஏற்பட்டது? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொதுவான விஷயங்களில் பிணக்கு இருந்ததா?

 அரசியலில் ராஜீவ் காந்தி கற்றுக்குட்டி என்பதற்கும் ஜெயவர்த்தனே பழந்தின்று கொட்டை போட்டவர் என்பதற்கும் அவ்வொப்பந்தமே சாட்சி. 
 ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிகச் சரியான உதாரணம் கூறி ஒப்பந்தத்தின் தன்மையைத் தோலுரித்தார். 

 கணவன் - மனைவிக்கிடையே தகராறு. நடுவர் என்ன செய்ய வேண்டும்? அவ்விருவருக்கும் இடையே ஒப்பந்த விதிமுறைகளை எழுதி அவர்கள் கையெழுத்திட்டபின் நடுவர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும்; அவர்களில் எவரேனும் ஒருவர் விதிமுறையை மீறினால் நடுவர் மற்றவருடன் சேர்ந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங்கே மனைவியை அடிப்பதற்குக் கணவனுடன் நடுவர் ஒப்பந்தம் செய்திருக்கிறார்!.

 இதற்கு மேல் தெளிவாக வேறு யார் கூற முடியும்?

 “தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள், எல்லாவற்றிற்க்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை... புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள்” என்கிறார் ராம். 

 அரசியல் படுகொலைகளுக்கான காரணத்தை ஏற்கனவே விளக்கியாகிவிட்டது. “செய்த அட்டூழியங்கள்” என்பதற்கான பட்டியலை வெளியிடுவாரா ராம்? சர்வதேசப் போர் நெறிகளை மீறி “உங்கள் நண்பர் ராஜபக்ஷே” என்று பேட்டியாளர் குறிப்பிடும் ராஜபட்சேவின் ராணுவத்தால் போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை நாம் அறியவில்லையா? பள்ளிகள், ஆலயங்கள் ஆகியவற்றின் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் குழந்தைகளையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றழித்தது உண்மையல்லவா?

 “பேச்சு வார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள்” என்று ராம் குறிப்பிடுவது இந்திய, சிங்கள அரசுகளின் யோசனையை ஏற்று அடிமை வாழ்வைத் தொடர்வதே. 

 “எல்லாவற்றிற்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை” என்று ராம் குறிப்பிடுவதை இங்கு விளக்கியாக வேண்டும். 

 ‘இந்திய அமைதிப் படை’ என்ற பெயரில் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தின் கூர்க்கர் பிரிவு சென்றது. யாரை எதிர்த்து, எதற்காகப் போரிடுகிறோம் என்பது வீரர்களுக்குத் தெரியவேண்டும். சுற்றி வளைத்துக் கடைசியில் இந்துக்களான தமிழர்களைக் கொல்வது தங்கள் வேலை என்பதை அறிந்ததும் “இந்துக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கமாட்டோம்” என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தானே இந்திய ராணுவத்தில் சேர்ந்தோம். எங்களை இந்தியாவுக்கு அனுப்புங்கள்” என்று முரண்டு பிடித்ததால் கூர்க்கர் பிரிவு, சென்ற சுவடு தெரியாமல் உடனே திருப்பி அனுப்பப்பட்டது. 

 இந்நிகழ்ச்சி உண்மைதானா என்பதைத் தம் நாளிதழின் பெயரை ‘தி இந்து’ என வைத்துள்ள ராம் விசாரித்து அறிந்து தம் மதச்சார்பின்மையை அறிவிக்கலாம்.
 பொற்கோயில் நடவடிக்கையின்போது மெட்ராஸ் ரெஜிமெண்டை அனுப்பினார் இந்திராகாந்தி. ஈழத்தமிழர்களை ஒழிக்க சிக் ரெஜிமெண்டை அனுப்பினார் ராஜீவ் காந்தி. ஏமாந்தவர்கள் ராணுவ வீரர்களே!.
 ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் ஆங்கில நாளேடான “இண்டியன் எக்ஸ்பிரஸ்” இதழில் '’Who is the Ravana' என்ற தலைப்பில் கடிதமொன்று எழுதினார்.

 “இளம் விதவையான ராணுவ வீரரின் மனைவியிடம் சிறுவனான மகன் மாலை சூட்டப்பட்ட அப்பாவின் படத்தைப் பார்த்து ‘அப்பா யாரை எதிர்த்துப் போரிட்டு இறந்தார்?’ எனக் கேட்டதும் அந்தத் தாய் பதில் கூற முடியாமல் திணறினாள். வீர மரணம் எய்துவதைப் பெருமையாகக் கருதவேண்டிய பெண் வீணான மரணம் குறித்து என்ன சொல்வாள்? "குண்டு துளைக்காத சட்டை அணிந்து கொண்டு கறுப்புப் பூனைகளுடன் வலம் வரும் ராஜீவ் காந்தி அவர்களே!. அநியாயப் போருக்கு ராணுவ வீரர்களைப் பலி கொடுக்காதீர்,” என்றல்லவா சொல்வாள்?!

 ஜெயவர்த்தனேவிடம் எளிதில் ஏமாந்துபோன ராஜீவ்காந்தி ஈழப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் ‘புடுங்கும்’ வேலையைச் செய்ய ராணுவத்தை அனுப்பினார். இந்திய ராணுவத்தைக் கூலிப் படையாக்கியது இலங்கையைப் பொறுத்த அளவில் இது இரண்டாவது முறையாகும். 

 இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கையில் ‘ஜன விமுக்தி பெரமுனா’ என்ற கட்சி மிகப் பெரிய புரட்சியை நடத்தியது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்திய ராணுவத்தை அனுப்பி அப்புரட்சியை ஒடுக்கினார்.
 தாய்க்கும் மகனுக்கும் இலங்கை அரசின் மீது எத்துணை பரிவு!. அதற்கு ஈடாகத்தான் இன்று இந்தியாவை நாய்க்கும் கீழாக மதிக்கிறார் ராஜபக்சே!.

 இந்திய அமைதிப்படை ஈழத் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளைத் ‘தீராநதி’யில் நினைவு கூர்ந்துள்ளார் எழுத்தாளர் வாஸந்தி.

 ராஜீவ் காந்தியின் கொலைக்கான முகாந்திரங்கள் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையை அருள் கூர்ந்து ராம் தம்’தி இந்து’ நாளிதழில் வெளியிட வேண்டும்.

 திருச்சி வேலுச்சாமி என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக மறைக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணர்ந்து நூலொன்று வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய சிலர் வெளியிலுள்ளனர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். புலனாய்வில் ஆர்வமுள்ள ராம் உடனடியாக அந்நூல் கூறியுள்ள விஷயங்கள் தொடர்பாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். 

 தமிழீழக் கோரிக்கை குறித்து “அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது” என்று நிராகரிக்கிநார் ராம். சிங்களப் பேரினவாதம் என்ற ஒன்று இலங்கையில் இருப்பதை வேண்டுமென்றே மறைத்துப் பேசும் பேச்சு அது.

 மதம், மொழி, இன அடிப்படையில் நாடுகள் இருப்பது ராமுக்குத் தெரியாதா?

 “போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க ராஜபக்ஷே தயக்கமின்றிச் செயல்படவேண்டும்” என்ற ராம் தமிழரல்லாத மூன்றாம் நபராக நின்று கொண்டு அநியாயத்துக்கு வக்காலத்து வாங்கும் செயல்தான் இது. 

கொலையாளியையே கொலைபற்றி விசாரிக்கச் சொன்னால் எப்படி இருக்கும்?

 ராம் உண்மையானவராக இருக்கும் பட்சத்தில் பிரியங்கா – நளினி சந்திப்பு வேலூர்ச் சிறையில் நடந்ததைப் பற்றிய முழு விபரங்களையும் தம் நாளிதழில் வெளியிட வேண்டும்.  

 தேவயானி கைது விவகாரத்துக்காகப் “பிரச்சினையை முடிக்காமல் நாடாளுமன்றத்துக்குள் காலடி வைக்க மாட்டேன்” என்று சல்மான் குர்ஷித் கூறுவதும் “அமெரிக்கா மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்” என மற்றொரு மத்திய அமைச்சர் கூறுவதும் நாம் ஏதோ வேற்று நாட்டில் வாழ்வது போன்ற தோற்றத்தைத் தரவில்லையா?

 தமிழக மீனவர்கள் அன்றாடம் தாக்கப்படுவதும் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் அருவருப்பாகத் தோன்றவில்லையா?

 மன்மோகன் சிங்குக்கு விபரங்கள் தெரியாதா? 

 அப்பன் வீட்டுச் சொத்தாகக் கருதிக் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தந்ததன் விளைவுதானே தமிழக மீனவர்களின் சிக்கல். 

 ஒன்று தெளிவாகத் தெரிகிறது. கூச்சமேயில்லாமல் தமிழர்களுக்கு விரோதமாகப் பேசத் தமிழ்நாட்டிலேயே துரோகிகளை அணி திரட்டுகிறார் ராம்!. பார்க்கலாம்!. 

தரவுகள் :  
’மீட்சி’ 
‘மண்மொழி’
‘தமிழ்நேயம்’
‘தீராநதி’
 
- தெ.சுந்தரமகாலிங்கம்,
வத்திராயிருப்பு
(தொடர்பு எண்: +91 9443556950)

நஞ்சு கக்கும் "இந்து' ராம் - பாலசிங்கம் வெளியிட்ட உண்மைகள் ...


இந்து நாளிதழ் குழுமத்தின் தலைவர் என். ராம் "இந்து' தமிழ் நாளிதழுக்கு 1-1-14 அன்று அளித்த நேர்காணலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எதிராக நஞ்சு கக்கியுள்ளார்.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article5524113.ece

பிரபாகரன் ஒரு போல்பாடிஸ்டு. துப்பாக்கி மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை, பேச்சுவார்த்தைகளில் கிடையாது. இராசீவ்-செயவர்த்தனா உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது என்றும் இன்னும் விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தியும் கூறியுள்ளார்.


ஆனால், உண்மை என்ன? இராசீவ்-செயவர்த்தனா உடன்பாட்டின் பின்னணியில் என். ராம் செய்த இரண்டக வேலைகளை விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் அம்பலப்படுத்தியுள்ளார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் பக்கம் 361 - 363)



இந்திய-இலங்கை உடன்பாடு உருவாக்கப்பட்ட பின்னணி நிகழ்வுகளை இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த தீட்சித் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கொழும்பில் எனது பணி என்னும் தலைப்பில் எழுதிய நூலில் விவரித்துள்ளார்.

ஒப்பந்தம் உருப்பெற்றதன் மூலக் கதையை விவரித்துச் சொல்லும் தீட்சித், விடுதலைப் புலிகள் சம்பந்தமான ஒரு விசித்திர நிகழ்வையும் சொல்கிறார். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட புலிகளின் பிரதிநிதி ஒருவர், இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை "இந்து' பத்திரிகை ஆசிரியரான ராம் அவர்களுக்குத் தெரியப்படுத்தினாராம். இத் தீர்வுத் திட்டம் ஆறு அம்சங்களைக் கொண்டதாகத் தீட்சித் எழுதுகிறார்.

1) சிங்கள இராணுவம் தனது படை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 

2) தமிழ்த் தாயகமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

3) 1983-86 கால இடைவெளிக்குள் பேசப்பட்ட தீர்வு யோசனைகளின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

4) தமிழ் மொழி தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஏற்கப்பட வேண்டும்.

5) இறுதித் தீர்வுக்கு முன்னராக ஒரு இடைக்காலத் தீர்வு செயற்படுத்தப்பட வேண்டும்.

6) இன விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சிங்கள இராணுவக் கட்டமைப்பில் தமிழர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.

இந்த ஆறு அம்ச யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்துத் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையையும் கைவிடும் என ராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இந்த யோசனைகள் உள்ளடங்கியதாகத் தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்கள் கைச்சாத்திட வேண்டும் எனவும் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி ராமுக்குத் தெரிவித்தாராம். சீனாவுக்கு விஜயம் செய்த பின்பு சிங்கப்பூரில் தங்கி நிற்கும்பொழுது, தொலைபேசி மூலமாக ராமுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக தீட்சித் எழுதுகிறார். புலிகளின் பிரதிநிதி மூலம் தனக்குக் கிடைத்த செய்தியைக் காணி, மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் தனது நண்பருமான காமினி திசநாயகா வாயிலாகச் சிங்கள அரசுக்குத் தெரியப்படுத்தினாராம் "இந்து' பத்திரிகையாசிரியர். இப்படியான ஒரு விசித்திரமான கட்டுக்கதை தீட்சித்தின் நூலில் தரப்படுகிறது.1

தீட்சித்தின் இந்தக் கதையைப் பாலசிங்கம் அடியோடு மறுத்திருக்கிறார். அவரது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :

"விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர்ப் பிரதிநிதியால் ராமுக்குத் தெரிவிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டதாக எழுதுகிறார் தீட்சித். இதில் சர்ச்சைக்குரிய கேள்வி என்னவென்றால், "விடுதலைப்புலிகள் இயக்கம் இப்படியான யோசனைகளை அல்லது கோரிக்கைகளை "இந்து' பத்திரிகை ஆசிரியர் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததா?' என்பதுதான். அதுவும் பெயர் குறிப்பிடப்படாத மர்மமான நபர் ஒருவர், புலிகளின் சிங்கப்பூர்ப் பிரதிநிதி என உரிமை கோரி, அரசியல் தீர்வு யோசனைகளைத் தொலைப்பேசியில் தெரிவித்தார் என்ற இந்தக் கட்டுக்கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் இலட்சியத்தையும் ஒட்டுமொத்தத்தில் தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் இந்தப் புனைகதையை யார் புனைந்தார்களோ தெரியவில்லை. எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகளையும் சம்பந்தப்படுத்தி, நியாயப்படுத்தும் நோக்குடன் இந்த விபரீதமான சம்பவம் சோடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பதையும் நான் உறுதிபடக் கூறுவேன். "இந்து' ஆசிரியர் ராம், இந்தியத் தூதுவர் தீட்சித், சிங்கள அமைச்சர் காமினி ஆகியோரும் "ரா' புலனாய்வுத் துறையினரும் சேர்ந்து திரித்த கட்டுக் கதை என்றே இதை நான் கருதுகிறேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகளின் இந்த யோசனைகளே அடிப்படையாக அமைந்திருந்தால் பிரபாகரனும் நானும் இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தியைச் சந்தித்தபொழுது இவ்விடயம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லையே? ராமும் தீட்சித்தும் அனுபவ முதிர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் என்றதால், விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர்ப் பிரதிநிதி என உரிமை கோரி யாரோ இனம்தெரியாத நபர் இனப் பிரச்சினைக்கு ஒரு யோசனைத் திட்டத்தைத் தொலைப்பேசியில் தெரிவித்தபோது, அதன் நம்பகத்தன்மை பற்றிப் புலிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கத் தவறியது ஏன்? அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கும் கொள்கைக்கும் மாறுபட்டதாக இந்த யோசனைகள் அமையப் பெற்று இருப்பதை எவரும் இலகுவில் கண்டு கொள்ளலாம். குறிப்பாக, புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுய நிர்ணய உரிமை போன்ற அடிப்படைக் கோரிக்கைகள் எதுவுமே இந்த யோசனைத் திட்டத்தில் அடங்கவில்லை. இவற்றிலிருந்து ஒரு உண்மை புலனாகும். அதாவது, இந்த சிங்கப்பூர் நாடகம் ஒரு கட்டுக்கதையன்றி வேறொன்றும் அல்ல என்பதுதான்.

நன்றி: http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=646:--q----&catid=31:thenseide&Itemid=27

.....

இந்து ராம் கொடுத்த போலிச் சான்றிதழ் :காவியா

இந்து ராம் தென்னிந்தியாவின் முற்போக்கு முகமூடி. மார்க்ஸ்சிஸ்டுகளின் கொள்கை வகுப்பாளர். பத்திரிகைத் துறையில் பல சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய மாமேதை. உணர்வுகளின் சுதந்திரம் குறீத்து நீண்டகாலமாக பேசுகிறவர் என்பதோடு வெறுப்புணர்வுக்கு எதிரான முகமாக தமிழகத்திலுள்ள மார்க்சியர்களால் போற்றப்படுபவர். தமிழகத்தில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் இந்து ராம் குறித்த பிம்பங்கள் இவைகள்தான். கடந்த காலத்தில் சந்திரிகாவிடன் இருந்து “லங்கா ரத்னா” விருதைப் பெற்றுக் கொண்டவர் சிங்கள இன வெறி பயங்கரவாத அரசின் வேலைத் திட்டத்தின் கீழ் தனது இந்துப் பத்திரிகையை நடத்தி புலிகளுக்கு எதிராக தொடர்ந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர். பல் வேறு தருணங்களில் ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி தன் பார்ப்பன அரசியலை மார்க்ஸிய முகமூடியோடு முன்னெடுப்பவர். கடந்த காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த பொய்ச் செய்திகளை பரப்பி சுய இன்பம் அனுபவித்த இந்த இந்து ராம் இப்போது ஈழப் போராட்டத்தின் கசப்பான முடிவுகளால் உச்சக் கட்ட சந்தோசத்திற்கு சென்றிருக்கிறார். இலங்கை அரசால் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களுக்கு கைமாறாக தனது இந்துப் பத்திரிகையை பயன்படுத்திய ராம். இப்போது நேரடியாக களத்தில் இறங்கி சிங்கள பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வேலை பார்க்கத் துவங்கிவிட்டார்.
கொடூரமான துயரத்தோடு வன்னிப் போர் முடிந்து அங்கிருந்து வெளியேறிய மக்கள் பல முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மிருகங்களைக் கூட அடைத்து வைக்க யாரும் பயன்படுத்தாத முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களுக்குள் அன்றாடம் கொலைகள், பாலியல் வன்முறைகள், கடத்தல், பட்டினிச்சாவுகள், சித்திரவதைகள் எனப் பலவாறாகவும் நடந்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலம் சந்திக்காத இந்த பேரவலத்தை தமிழ் மக்கள் சந்தித்து முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் போது அந்த முகாம்கள் குறித்தோ அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தோ எந்த ஊடகங்களும் செய்தி சேகரிக்க அங்கு அனுமதிக்கப் படவில்லை. முகாம்களுக்குள் இலங்கை இராணுவத்தால் அழைத்து வரப்பட்டவர்கள் வட இந்திய ஆங்கில ஊடகவியளார்களே. இவர்கள் இலங்கை அரசுச் செலவில் வந்து செல்கிறார்கள். மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு முகாம்களுக்குள் இருப்பதாக செய்திகள் கொடுக்கிறார்கள். இறுதிப் போரின் போதும் போர் முடிவுக்கு வந்த பிறகும் இந்த ஆங்கில ஊடகங்கள் தமிழக மக்கள் மீது எவளவு கொடூரமான இனவாதத்தைக் கக்கினார்கள் என்பதை நாம் பார்த்தோம். கையலாகநிலையில் கைவிடப்பட்ட ஒரு இனம் குறித்த பொய்யான பிரச்சாரங்களை ஆங்கில ஊடகங்கள் கட்டவிழ்த்து விட்ட போது ஆங்கில ஊடகங்களின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக எதிர்பிரச்சாரம் செய்ய வேண்டிய தமிழக ஊடகங்களோ அமைதி காத்தது. பலரும் துணைத் தூதர் அம்சாவிடம் சரணாகதி அடைந்திருந்தார்கள். ஆனால் அதை எல்லாம் நாம் கண்டித்து எழுதினோம். ஆனால் இவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றோ? ஏன் இவ்வாறு இந்தியாவின் ஒரு பகுதி தமிழக தமிழ் மக்கள் மீது பாகுபாடு காட்டுகிறார்கள் என்றோ என்றாவது நாம் சிந்தித்திருப்போமா? ஆனால் அந்த நிகழ்வை உடைக்க இப்போது ஒரு சூழல் கனிந்திருக்கிறது.
யார் இந்த இந்து ராம்? ஏன் இப்படிச் செய்கிறார்.
சந்திரிகாவிடம் இருந்து சிங்கள ரத்னா விருதைப் பெற்றுக் கொண்டவர் என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இவர் ஆங்கிலம் படித்த பத்திரிகையாளர்களை உருவாக்குகிறேன் என்று ஏஷியன் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் என்றொரு நிறுவனம் நடத்துகிறார். இவரது இந்து பத்திரிகைதான் இந்த கல்வி நிறுவனத்தை நடத்துகிறது இங்கு ஏராளமான சிங்களர்கள் படிக்கிறார்கள். இலங்கை அரசு வருடம் தோறும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியும் ஊக்குவிக்கிறது. இங்கு படித்து வருகிறவர்கள்தான் இன்றைய ஆங்கில ஊடகங்களின் அடுத்த தலைமுறை இவர்களே இலங்கை தொடர்பான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இவர்களை மிக சாதாரணமாக எடை போட்டால் நாம்தான் முட்டாள்கள்.பெரும் நிதிப் பின்னணியோடு அரசு அதிகாரப் பலம், ஊடக சங்கங்களின் பலம் என எல்லா பலங்களோடும்தான் இவர்கள் கருத்துரிமை பேசுவார்கள். இதுதான் கடந்த இருபதாண்டுகளாக தமிழக ஊடகங்களின் நிலை. ஆனால் இது தமிழகத்தோடு முடிந்து போகிற ஒன்றல்ல.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக தமிழகம் கொதித்த போது 15 பேர் ஈழத்துக்காக உயிர் துறந்தார்கள். தமிழகமே கொந்தளித்தது என்பதும் உண்மைதான். ஆனால் அடக்குமுறை எப்போது துவங்கியது என்றால் முதன் முதலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்களுக்காக ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்தது. தமிழகத்தில் அதுதான் மிகப் பரந்த அளவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த முதல் போராட்டம். அதை ஒட்டி தமிழகத்தில் போராட்டம் வெடிக்க கருணாநிதியின் திமுக அரசு தவிர்க்க முடியாமல் முதன் முதலாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருந்த அன்று காலை வெளிவந்த இந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி என்ற ஒரு பத்திரிகையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். The dangers of tamil chauvinism என்கிற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரை திட்டமிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அன்று இந்து பத்திரிகையால் வெளிக் கொணரப்பட்டது. சரி ஆங்கில அறிவாளிகள் அல்லவா? ஏதாவது விஷயம் இருக்கும் என நினைத்து வாங்கிப் பார்த்தால் ஈழத்தமிழர் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு தொடர்பாக ஹிந்து பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் ராம் அவர்களுக்கும் எழுந்துள்ள கொதிப்பை உணர்த்தியது. அந்தக் கொதிப்பில் உள்ள நியாயத்தை பார்ப்பதற்கு முன் மாலினியின் எழுத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.
# ஈழம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தல் இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவீரவாதமாக உருப்பெறும் தன்மை இந்த திரட்சிக்கு உண்டு. தெருவுக்குத் தெரு இது (ஈழ ஆதரவு) வளர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், மதிமுகவும் இதை உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
# வட இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கு (தமிழகத்தில்) கேம்பெய்ன் மாதிரி நடத்துகிறார்கள். எல்லோரையும் திரட்டி விட்டார்கள். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளின் தலைமையகத்தை பிடிக்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இலங்கை ராணுவம் இது வரை இப்படி ஒரு வெற்றியை அடைந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து விடுவார்கள். இவர் யார் என்றால் பாரதப் பிரதமரை படுகொலை செய்ய மூளையாகச் செயல்பட்டவர்.
# தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் இங்கிருந்து கொண்டு காஷ்மீரிகளையும் ஜிகாதிகளையும் ஆதரிப்பதற்கு சமமாக இருப்பதுபோல் இருக்கிறது.
# இதை(ஈழத்தை) ஆதரித்தால் அதை (காஷ்மீரை) ஆதரிக்கத்தானே வேண்டும். இதையும்( ஈழத்தையும்) அதையும் (காஷ்மீரையும்) ஒன்றாக வைக்க முடியுமா?
# புலிகள்தான் தென்கிழக்காசியாவில் தீவீரவாதத்தை துவங்கியது. அவர்களால்தான் அகதிகளாக தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையில் இங்குள்ளவர்களை இன்வால்வ் ஆக்குகிறார்கள்.
# இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு 83லிருந்து வெறும் இருபது வருட வரலாறே தெரியும்.
# இவர்கள் புலிகளின் மாஸ்டர் மைன்டாக செயல்படுகிறார்கள். ஒரே இரவில் இவர்கள் விழித்துக் கொண்டார்கள்.
# இந்திய மத்திய அரசு கடந்த பத்து வருடமாக சக்ஸசாக போய்க் கொண்டிருக்கிறது. (ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது போல புரிந்து கொள்ளவும்) இந்நிலையில் இந்த மாஸ்டர் மைன்டுகளை வளரவிட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்து.
இப்படியாக எழுதப்பட்ட அந்தக் கட்டுரைதான் முதல் ஒடுக்குமுறை அவர்கள் இந்த எழுச்சியை எதிர்பார்க்க வில்லை என்பதோடு. இதை தடுக்கவும் முனைந்தனர். அதுவே அந்தக் கட்டுரையின் நோக்கம் இந்துவின் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்துதான் அரசு அடக்குமுறை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டது. அது மட்டுமல்லாமல் வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்து ராமும், சோ ராமசாமியும், சு. சாமியும் என்ன சொல்கிறார்களோ அதிலிருந்தே தங்களின் பார்ப்பன நிலைப்பாட்டை எடுப்பார்கள். எப்போதும் பார்ப்பன நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்து ராம்தான் வட இந்திய ஆங்கில ஊடகங்களின் மாஸ்டர் மைண்ட். கடைசி வரை இதுதான் தொடர்ந்தது.
கடைசியில் ஒட்டு மொத்த தமிழினமும் கதறித்துடித்த போது பெரும் சந்தோசக் களியாட்டங்களில் ஈடுபட்ட பெரும்பான்மை சிங்கள இனத்தைப் போலவே இந்து ராம் தலைமையிலான இந்திய ஆங்கில ஊட்கக் கும்பல் அதை ஒட்டி இலங்கை அரசின் விருந்தினர்களாக இலங்கைக்கு சென்று வந்தனர். இப்போதும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இப்போது இலங்கை அரசின் விருந்தினராக போய் வந்திருக்கும் இந்து ராம் இராணுவ அதிகாரிகள் சூழ முகாம்களைப் போய் பார்த்திருக்கிறார். கருப்பும், கந்தலுமாக, உணவில்லாமலும் உடுக்க துணியில்லாமல், தண்ணீர் இல்லாமலும், செம்மண் தரையில் படுத்துக் கிடக்கும் அந்த வன்னி விவசாய மக்களைப் பார்த்து விட்டு வெளியில் வந்த இந்து ராம். “இந்த முகாம்கள் சிறப்பான முறையில் இருப்பதாகவும் இங்கு குழந்தைகள் மிக மகிழ்ச்சியுடன் உல்லாசமாக இருப்பதாகவும் இம்மக்களுக்கு அதிபர் ராஜபட்சே சிறந்த எதிர்காலத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும். தெரிவித்திருக்கிறார் என்பதோடு. முகாம்கள் குறித்த தவறான தகவல்களைக் கொடுத்த சர்வதேச பத்திரிகையாளர்களை கண்டிக்கவும் செய்திருக்கிறார் இந்த முற்போக்கு அறிவுஜீவி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐநா வெளியிட்ட தகவல்களின் படி கிழக்கில் மட்டும் 49,000 கணவனை இழந்த விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வன்னிப் போர் முடிந்துள்ள நிலையில் முகாம்களில் இருக்கும் பொது மக்கள் , சிறைகளுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான பெண் போராளிகள் என வன்னியில் மட்டும் ஏறத்தாள ஐம்பதாயிரம் விதவைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்கள். ஒன்றரை லட்சம் மக்கள் கையையோ காலையோ இழந்தவர்கள். இதுதான் முகாம்களின் நிலை இதை எல்லாம் மறைத்து உண்மையை வெளிக் கொண்டு வருகிற வெகு அபூர்வமான பத்திரிகையாளர்களைக் கூட கண்டிக்கிற இந்த இந்து ராம். பாசிச பயங்கரவாத இலங்கை அரசிற்கு இந்த சான்றிதழைக் கொடுத்து எந்த விருதைப் பெறப் போகிறார் என்று தெரியவில்லை. உடலாலும் உள்ளத்தாலும் ஊனமாக இன்னும் சில தலைமுறைகளுக்கு வாழப் போகும் ஒரு இனம் குறித்த இந்து ராமின் கொடூரக் கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மனித குலம் வெட்கித் தலைகுனியும் படியான இலங்கைச் சூழலை ஆதரிப்பது என்பதற்கு இந்து ராம் பதில் சொல்ல வேண்டிய காலம் ஒன்று வரலாம் வராமலும் போகலாம். இங்குதான் நாம் அபத்தச் சூழலுக்குள் வாழ்கிறோம்.
நாம் எல்லோரையும் தண்டிப்போம் என்கிறோம் தவறு செய்கிறவர்கள், பெண்களை பாலியல் வன்முறை செய்தவர்கள், குழந்தைகளைக் கொன்றவர்கள். ஆயுதம் கொடுத்தவர்கள் என எல்லோருமே தண்டிக்கப் பட வேண்டும் என நினைகிறோம். ஆனால் நாம்தான் வரலாற்றில் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுகிறோம். பாதிக்கப்பட்ட நமக்கே உலகம் கண்ணீரையும் துன்பத்தையும் பரிசளிக்கிறது. தவறு செய்தவன் சந்தோசமாக இருக்கிறான்.ஆயுதம் கொடுத்தவர்களுக்கோ, அதற்கு துணை போனவகளுக்கோ வெற்றி மேல் வெற்றியும் பதவி மேல் பதவியும் கிடைக்கிறது.ஆனாலும் இவைகளைக் கண்டு நாம் சோர்ந்து ஒதுங்க வேண்டியதில்லை. ஒரு சமூகம் அழிவின் விழிம்பில் சிக்கியிருக்கும் சூழலில் கூட சில குரல்கள் நம்பிக்கையளிக்கின்றன. அந்தக் குரல் ஒரு பெருபான்மை பேரினவாத சமூகத்திற்குள்ளிருந்து வருவதும் அவை முற்போக்குக் கருத்தாக இருப்பதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நாம் ஒரு லசந்தாவைத் தேடுகிறோம்.இன்று இந்த நாட்டின் பாசிச சூழலுக்குள் உண்மைகளை உறத்து ஒலிக்க லசந்தாக்கள் தேவைப்படுகிறார்கள். ராம்கள் அல்ல!

நன்றி: இனியொரு செய்திகள்

Wednesday, March 5, 2014

தி இந்து என். ராம்: ஊடக உலகத்தின் மண்டேலா!


ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் இந்தியாவில் உண்மை செய்திகளை “அழி”ப்பதில் தி இந்துக்களுக்கு ஈடுஇணை இல்லை. இந்தியாவிற்கு ஒரு மண்டேலா கிடைத்த செய்தியும் ”தி இந்து "மூலம்"”தான் கிடைத்தது.

சென்னை, மலை சாலையில் உள்ள கஸ்தூரி & சன்ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து வெளிவரும் தி இந்து மூலம்.

யார் இந்த ஊடக உலகத்தின் மண்டேலா?

வேறு யாராக இருக்க முடியும்? திபெத் போராட்டத்தை நசுக்கி அந்நாட்டை அடிமைபடுத்தியுள்ள சீனாவை ஆதரித்து தன்னை “கம்யூனிஸ்டாக” காட்டிகொள்ளும்(கொல்லும்) “தி இந்து” என். ராம் ஒரு மண்டேலா.

உலகமே அதிர்ந்துபோகக்கூடிய அளவுக்கு கொடூரமான இனப்படுகொலையை செய்த ராஜபக்சேவை “சானல் 4” அம்பலப்படுத்தியபோது அவனிடம் பேட்டி கண்டு ஈழத்தில் போர்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று
நவீன உலகின் அரக்கனுக்கு வக்காலத்து வாங்கிய, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை தொடர்ந்து மறைத்து வருவதற்கு சிறந்த பத்திரிக்கையாளன் என்று “லங்கா ரத்னா” விருதை சந்திரிகா கையால் வாங்கிய “தி இந்து” என்.ராம் தான் அந்த ஊடக உலகன் மண்டேலா.

ரோம் பற்றியெறிந்தபோது பிடில் வாசித்த கதையாக

ஈழ கொடூரங்களை மறைத்து ஊடக ஜாம்பவான் இவர்

ராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசியவர்

சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை மிரட்டி ஏப்பம் விட்டவர்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரர்.

22.06.2006 ல் வெளியிட்ட தலையங்கத்தில் “கச்சத்தீவு தீர்க்கப்பட்டுவிட்டது” என்று சட்டத்திற்கு புறம்பாக, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டது. இதை இலங்கையில் உள்ள ஊடகங்கள் ”கச்சத்தீவு பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது” என்று இந்திய செய்தி நிறுவனம் சொன்னதாக உடனடியாக செய்தி வெளியிட்டது. இப்படி தேசதுரோகத்தை செய்தவர் இந்த ஊடக உலகத்தின் மண்டேலா.

இவர் எப்போது மண்டேலா ஆனார் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை கொண்டாடிய தி இந்துவின் வரலாறு நம்முடையது.

ஊடக உலகத்தின் மண்டேலா (தி இந்து ராம்) பற்றிய பதிவு போதும் என்று நினைக்கிறேன்...இன்னும் தோண்டி எடுக்க நிறைய உள்ளது. அந்த துர்நாற்றத்தை தாங்கும் சக்தி எனக்கில்லை.

"மன்னார்குடி” சமஸ் அவர்களே,



”அந்த மூவரையும் தூக்கிலே போட வேண்டும்!” என உரத்துச் சொல்கிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல்.

வருங்காலப் பிரதமர் என காங்கிரசால் முன்னிறுத்தப்படும் ராகுல்காந்தியும், “பிரதமரை கொன்றவர்களுக்கு விடுதலை அளித்தால் சாமானியன் நிலை என்ன” என்றார்.

சாமானியர்கள் பற்றி இவரது தந்தை என்ன மாதிரியான மனநிலையில் இருந்தார் என்பதற்கு, ஒரு உதாரணம் சொல்லலாம்.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 8000 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள், பலநூறு பேர் பலாத்தாரப்படுத்தப்பட்டார்கள். இதுபற்றி ராஜிவ்,

”””பெரிய ஆலமரம் விழுந்தால் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்””” என்றார் மிகச் சாதாரணமாக.

“தூக்குத்தண்டனையை நான் விரும்பவில்லை” என சாந்த முகத்துடன் சொல்லும் சோனியா இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன?

“சாகும்வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும்!” என்று மணிசங்கர் அய்யர் சொன்னதன் அர்த்தத்தை ஆழ்ந்து நோக்கினால் விபரீதம் புரியம்...

இறுதியாக ஒரு கேள்வி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்...ஜெயின் கமிஷன், மற்றும் வர்மா கமிஷன் பற்றி சிறிது எழுதுங்களேன் ஆண்மை இருந்தால்...?


http://tamil.thehindu.com/opinion/columns/தமிழினத்தின்-ஏழு-மண்டேலாக்கள்/article5747725.ece